கேரள மாநிலம் கொச்சியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட காங்கிரஸ் MLA உமா தாமஸ் கால் தடுக்கி மேடையிலிருந்து கீழே தடுமாறி விழுந்தார். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் ICU-வில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உமா தாமஸின் உடல் நிலையில் இன்று சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, உமா தாமஸ் மேடையிலிருந்து தவறி விழுந்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.