உஸ்பெகிஸ்தானின் பார்க்கெண்டில் உள்ள ஒரு தனியார் மிருகக்காட்சியில், F. Iriskulov (44) என்பவர் காவலராக பணியாற்றி வந்தார். இவர், கடந்த 17ஆம் தேதி இரவு பணியில் இருந்தபோது, தனது காதலியை கவருவதற்காக, சிங்கத்தின் கூண்டிற்குள் சென்று வீடியோ எடுத்துள்ளார். அப்போது, அங்கிருந்த மூன்று சிங்கங்கள், காவலரை தாக்கி உயிருடன் சாப்பிட்டது. இது முழுவதும், அவரது செல்போனில் வீடியோவாக பதிவாகி இருந்தது. இந்த சம்பவம் மிருகக்காட்சி பணியாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.