கோவை: ஈஷாவில் நடைபெற்ற கிராமோத்சவம்!

70பார்த்தது
ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற 16-வது ஈஷா கிராமோத்சவத்தின் இறுதி போட்டிகள் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய சத்குரு, அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் ஒவ்வொரு கிராமத்திலும் ஈஷா கிராமோத்சவத்தை கொண்டு செல்லும் திட்டத்தை அறிவித்தார்.
கிராமப்புற இளைஞர்களை போதைப் பழக்கத்திலிருந்து விடுவித்து விளையாட்டில் ஈடுபடுத்தும் முயற்சியாக ஈஷா கிராமோத்சவம் அமைந்துள்ளது. ஜாதி, மத வேறுபாடுகளைத் தாண்டி இளைஞர்களை ஒன்றிணைத்து ஒற்றுமை உணர்வை வளர்க்கிறது.
விளையாட்டின் மூலம் இளைஞர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என்று கூறினார். வீரேந்திர சேவாக் மற்றும் வெங்கடேஷ் பிரசாத் ஆகியோர் போட்டியில் பங்கேற்று வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கினர். மாரியப்பன் தங்கவேலு மற்றும் துளசிமதி ஆகியோர் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். சத்குரு, தனது மூளை அறுவை சிகிச்சை குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் 7 லட்சம் கிராமங்களில் ஈஷா கிராமோத்சவத்தை நடத்தும் திட்டத்தை அறிவித்தார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி