கோவை: உடலை வருத்தி கேட்டால் நிச்சயம் நடக்கும்!

50பார்த்தது
கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, முன்னாள் பிரதமரும் முக்கிய பொருளாதார கொள்கையை கொண்டு வந்தவருமான மன்மோகன் சிங் இறப்புக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டார். தொடர்ந்து பேசியவர் இன்று நான் முன்னெடுத்திருக்கும் இந்தப் போராட்டம் வரும் நாட்களில் தீவிரமாகும், கண் முன் அடுத்த தலைமுறைினர் அழிந்து கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். போரில் கூட பெண்களின் மீது கை வைக்க கூடாது என்பது நம் மண்ணின் மரபு, தமிழகத்தில் பெண்கள் குழந்தைகள் மீதான குற்றச்செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது, நேற்று கூறியபடி முருகப்பெருமானிடம் வேண்டி ஆறு சாட்டை அடிகளை சமர்ப்பித்து இருக்கிறேன். இன்றிலிருந்து விரதம் இருக்கப் போகிறேன் நேற்றே காலணிகளை கழட்டிவிட்டேன், உடலை வருத்தி ஒரு விஷயத்தை கேட்கும்போது அது நடக்கும் என்பது நம்பிக்கை மற்ற அரசியல்வாதிகளை போன்று மாணவி பாலியல் வழக்கு நிகழ்வை என்னால் சாதாரணமாக கடந்து செல்ல முடியாது என்றும், மன்மோகன் சிங் இருப்பிற்காக பாரதிய ஜனதா சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது என்றும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி