சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று (ஜன.2) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், திட்டமிட்டபடி திமுக அரசின் இந்தப் பெண்கள் விரோதச் செயல்பாடுகளைக் கண்டித்து பாஜக மகளிர் அணி சார்பில், நாளை (ஜன.03) மதுரையில் தொடங்கி, சென்னை வரை நீதி கேட்பு பேரணி கட்டாயம் நடைபெறும்” என்றார்.