தொண்டாமுத்தூர் - Thondamuthur

கோவை: இறந்த பின்னும் வாழ்வு கொடுத்த இளைஞர்

கோவை: இறந்த பின்னும் வாழ்வு கொடுத்த இளைஞர்

திண்டுக்கல் மாவட்டம் வெரியாப்பூர் அண்ணாமலை புதூர் பகுதியைச் சேர்ந்தவர் அழகம்மாள். இவரின் மகன் சிவராஜ் (36). இவர் கடந்த 28-ஆம் தேதி இரவு தன்னுடைய இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக இவர் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று மருத்துவ பரிசோதனையில் சிவராஜ் மூளைச்சாவு அடைந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.  இந்நிலையில் சிவராஜின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரின் குடும்பத்தார் முன் வந்தனர். சிவராஜின் கல்லீரல் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் மற்றும் கண்கள் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், ஒரு மற்றொரு சிறுநீரகம் சேலம் அரசு மருத்துவமனைக்கும் தானமாக பெறப்பட்டு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிவராஜின் உடல் உறுப்பு தானம் மூலம் ஐந்து பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர். சிவராஜ், விவசாய கூலி வேலை செய்து தன்னுடைய குடும்பத்தை கவனித்து வந்திருக்கிறார். உறுப்பு தானம் செய்த சிவராஜின் உடலுக்கு கோவை அரசு மருத்துவமனை சார்பில் முதல்வர், டீன் நிர்மலா மற்றும் உயர் அதிகாரிகள் மலரஞ்சலி செலுத்தி உடலை சொந்த ஊரான ஒட்டன்சத்திரத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் கோவையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோஸ்


మహబూబ్‌నగర్ జిల్లా