சிங்காநல்லூர் - Singanallur

வங்கி கணக்கில் தவறாக கடன் பிடித்தம்.. இழப்பீடு வழங்க உத்தரவு

வங்கி கணக்கில் தவறாக கடன் பிடித்தம்.. இழப்பீடு வழங்க உத்தரவு

கோவை அருகேயுள்ள ஆறுமுக கவுண்டனுாரை சேர்ந்தவர் கிரீஷ்ஜெயன். இவரது மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தி வந்தது. அதில் சரவணம்பட்டி இன்பினிட்டி ரிடெய்ல் ஷோரூமில் டாடா கேபிடல் பைனான்ஸ் வாயிலாக 2022 ஏப் 9ல் கடனுக்கு வாங்கப்பட்ட ஐ போனுக்கான தவணை செலுத்த தவறியதால் 4130 ரூபாய் வங்கி கணக்கில் பிடித்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதிர்ச்சியடைந்த அவர் கடைக்கு நேரில் சென்று தான் ஐபோன் எதுவும் வாங்கவில்லை என்றும் தனது வங்கி கணக்கில் தவறாக பணம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளதாக முறையிட்டார். ஆனால் கிரிஷ் ஜெயனின் ஆதார் ஜெராக்ஸ் மொபைல் எண் கொடுத்து தான் கடன் வாங்கப்பட்டுள்ளதாக, கடை ஊழியர்கள் தெரிவித்தனர். போன் விற்றதற்கான இன்வாய்சை சரி பார்த்தபோது பொள்ளாச்சியை சேர்ந்த பாலாஜி என்பவர் ஐ போன் வாங்கியது தெரிய வந்தது. கிரிஷ் ஜெயனின் ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை பாலாஜி தவறுதலாக கொடுத்ததை விற்பனை பிரதிநிதிகள் சரி பார்க்கவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கிரிஷ் ஜெயின் இழப்பீடு வழங்க கோரி கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில் மனுதாரருக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு இழப்பீடாக 30000 ரூபாய் செலவு தொகை 5000 ரூபாய் அவரது வங்கி கணக்கில் பிடித்தம் செய்த 4130 ரூபாயை எதிர் மனுதாரர்கள் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

வீடியோஸ்


మహబూబ్‌నగర్ జిల్లా