கோயம்புத்தூர் மாநகராட்சி, வடக்கு மண்டலம், வார்டு எண். 27க்குட்பட்ட பீளமேடு, கிரியம்மன் கோவில் வீதியில் பொது நிதியிலிருந்து ரூ. 30. 00 இலட்சம் மதிப்பீட்டில் 950 மீட்டர் தொலைவிற்கு மழைநீர் வடிகால் மற்றும் 4 எண்ணிக்கையிலான சிறுதரைபாலம் அமைப்பதற்கான கட்டுமானப்பணிகளை மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் இன்று (19. 08. 2024) தொடங்கி வைத்தார்.
மாமன்ற உறுப்பினர் அம்பிகாதனபால் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உடன் துணை மேயர் ரா. வெற்றிசெல்வன், வடக்கு மண்டல தலைவர் வே. கதிர்வேல், பீளமேடு பகுதி 1 செயலாளர் செந்தமிழ்செல்வன் இளைஞரணி அமைப்பாளர் இரா. தனபால் இளைஞரணி துணை அமைப்பாளர் மணிகண்டன் பிரதிநிதி எலக்ட்ரிஷியன் வேலு பூவை சுரேஷ், மில்ரவி, கிருஷ்ணமூர்த்தி நடேசன் பழனிசாமி, மாவட்ட துணை அமைப்பாளர் லோகேஷ்வரி, அன்பரசி, மகேஷ்வரி, மகளிர் அணி
உதவி ஆணையர் ஸ்ரீதேவி, மாமன்ற உறுப்பினர் அம்பிகா தனபால், உதவி செயற்பொறியாளர் எழில் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.