அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பேட்டி

65பார்த்தது
அதிமுக ஆட்சியின் போது கோவை மாவட்டம் மற்றும் கோவை மாநகர பகுதிகளுக்கு மக்கள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டது.

குறிப்பாக 1500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டம், காந்திபுரம் மற்றும் ராமநாதபுரம் மேம்பாலங்கள், உக்கடம் மேம்பாலம் ஆகியவை அதிமுக ஆட்சியில் துவங்கப்பட்டது. குறிப்பாக உக்கடம் மேம்பாலம் அதிமுகவின் ஆட்சிக்காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் மேம்பால பணிகள் கிடப்பில் போடப்பட்டு பணிகள் சுணக்கமடைந்தது. எஞ்சிய பணிகளை முடித்து இப்போது முதல்வர் அதனை திறந்து வைத்துள்ளார்.

ஒரு வருடத்திற்கு முன்பே பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்காக உக்கடம் மேம்பாலம் திறந்து வைக்கப்பட்டிருக்க வேண்டும். இதேபோல் பெரியநாயக்கன்பாளையம், கவுண்டம்பாளையம், ஈச்சனாரி ஆகிய பகுதிகளில் மேம்பால பணிகள் நடைபெறுகிறது. கிணத்துக்கடவு, ஒத்தக்கால் மண்டபம், காரமடை ஆகிய பகுதிகளில் அதிமுக ஆட்சியில் தான் பாலங்கள் கட்டப்பட்டன.

பில்லூர் மூன்றாம் கட்ட குடிநீர் திட்ட பணிகளுக்கு 750 கோடி ரூபாய் அதிமுக ஆட்சியில் தான் ஒதுக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி