இன்னும் 2 தினங்களுக்கு வெயில் சுட்டெரிக்கும்

51பார்த்தது
இன்னும் 2 தினங்களுக்கு வெயில் சுட்டெரிக்கும்
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வெப்பநிலை இயல்பை விட அதிகமாகி மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில், இன்னும் இரண்டு நாட்களுக்கு வெப்பநிலை ஒரு சில இடங்களில் 2°-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்ச வெப்பநிலையாக மதுரை விமான நிலையத்தில் 40.3° செல்சியஸும், ஈரோட்டில் 19.6° செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலையாகவும் பதிவாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி