புதுச்சேரியில் 1 முதல் 8 வரையுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை (18.09.2024) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் என மாநிலம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்த நிலையில், நாளை 1-8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக ரங்கசாமி அறிவித்துள்ளார்.