கே. ஜி மருத்துவமனை மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்

77பார்த்தது
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து கே. ஜி மருத்துவமனை மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

கொல்கத்தாவில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில் நாடு முழுவதும் இச்சம்பவத்தை கண்டித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

மருத்துவர் சங்கத்தினரும் போராட்டம் அறிவித்து நாடு முழுவதும் மருத்துவமனைகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கோவையில் உள்ள கே. ஜி மருத்துவமனையில் மருத்துவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
இதில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இதில் கலந்து கொண்டு பேசிய மருத்துவமனை தலைவர் பக்தவச்சலம், மருத்துவர்கள் கொலை நடப்பது என்பது முட்டாள்கள் கையில் தேசம் இருக்கிறது என்பதை குறிப்பதாக கூறினார். காவல்துறையும் அரசு நிர்வாகமும் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்த அவர் கஞ்சாவை ஒழிக்க வேண்டும் எனவும் மது பானங்களை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

தொடர்புடைய செய்தி