கன்னட திரை உலகிலும் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக நடிகை சஞ்சனா கல்ராணி பரபரப்பு புகார் கொடுத்துள்ளார். கன்னட சினிமா உலகில் தனக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது. இதுபற்றி கர்நாடக சினிமா வர்த்தக சபை கூட்டத்தில் தனக்கு இழைக்கப்பட்ட பாலியல் தொல்லைபற்றிய புகார்கள் குறித்து பேசவிடாமல் தடுத்துவிட்டனர். கன்னட திரையுலகில் பாலியல் தொல்லை பற்றி விசாரிக்க குழு அமைக்க வேண்டும் என்று முதல்வர் சித்தராமையாவிடம் கோரிக்கை வைத்துள்ளார்.