கோவை: செயற்கை நுண்ணறிவு சிறப்பு மையத்தை திறந்து வைத்த அமைச்சர்
கோவை ஆர். எஸ். புரம் பகுதியில் உள்ள ஐமெரிட் நிறுவனத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) சிறப்பு மையத்தை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று திறந்து வைத்தார். அப்போது நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் கலந்துரையாடினார். பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், முந்தைய ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட கோவை எல்காட் திட்டத்தை உச்சநீதிமன்றம் வரை சென்று திறந்துள்ளதாகக் கூறினார். மேலும், தனது துறைக்கு பொறுப்பேற்ற பின்னர் மாதம் ஒரு முறை வெளிநாடு சென்று தமிழகத்திற்கு நிறுவனங்களை ஈர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.