அரசு மருத்துவமனையில் சிசிடிவி கேமிராக்கள் வேலை செய்யவில்லை.

72பார்த்தது
கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் பயிற்சி மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து பாஜக மாநில பொதுச்செயலாளர் ஏ. பி முருகானந்தம் இருப்பிட மருத்துவரிடம் சென்று சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஏ. பி முருகானந்தம்: -

மேற்கு வங்கத்தில் இரண்டாம் ஆண்டு பயிற்சி மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி கொடூரமாக பாலியல் செய்து கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தால் ஒட்டுமொத்த நாடே குலுங்கி உள்ளது. பாலியல் வழக்கில் இது வரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது இந்த வழக்கு சிபிஐ விசாரித்து வருகிறது.

அதேபோல முன்தினம் கோவை பயிற்சி மாணவி பாலியல் துன்புறுத்தல் ஆக்கப்பட்டுள்ளார்.
நாங்கள் நேரடியாக வந்து விசாரணை செய்து வந்தோம்
அரசு மருத்துவமனையில் 200 சிசிடிவி கேமிராக்கள் உள்ளது அது அனைத்தும் வேலை செய்யவில்லை.

அதேபோல கழிப்பிட வசதி இல்லை என பயிற்சி மருத்துவர்கள் கூறி வருகின்றனர். தீவிர சிகிச்சை பிரிவு இரத்தக்கரை படிந்த பஞ்சை எடுக்க கூட இங்கு ஆள் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்

சிசிடிவி பழுது மற்றும் கழிப்பிட வசதி செய்யாமல் இருந்தால் பாஜக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என முருகானந்தம் தெரிவித்தார்.