பயிற்சி பெண் டாக்டரிடம் அத்துமீறிய வட மாநில வாலிபர் கைது

62பார்த்தது
கோவை, அரசு மருத்துவமனை பயிற்சி பெண் டாக்டரிடம் அத்துமீறிய வட மாநில வாலிபர் கைது

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டு வருகிறது.

இந்த மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் பணி முடிந்து பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர் வாகன நிற்கும் இடத்தில் இருந்து தனது இருசக்கர வாகனத்தை எடுக்கச் சென்றார்.

அப்பொழுது அங்கு பதுங்கி இருந்த வட மாநில வாலிபர் ஒருவர் திடீரென தனது ஆடைகளை கழற்றி விட்டு அந்த பயிற்சி பெண் மருத்துவர் மீது பாய்ந்து தவறாக நடக்க முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்தவர் அந்த வாலிபரை தள்ளிவிட்டு கூச்சலிட்டார். சத்தம் கேட்டு காவலாளி ஓடி வந்தார். உடனே அந்த வாலிபர் தப்பி ஓடினார்.

தொடர்புடைய செய்தி