காலாவதியான குளிர்பானம் - தம்பதி வெளியிட்ட வீடியோ வைரல்!

72பார்த்தது
கோவை போத்தனூரைச் சேர்ந்த சன்சர் - நிஷா தம்பதியினர் அப்பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் பீட்சாவிற்காக காத்திருந்தபோது, அருகிலுள்ள டீக்கடையில் கேக் மற்றும் மா என்ற குளிர்பானம் வாங்கினர். குளிர்பானத்தை திறந்து குடிக்கும்போது அது கெட்டுப்போயிருப்பதை உணர்ந்தனர். கடையில் பணிபுரிந்த நபரிடம் இது குறித்து கேட்டபோது, அவர் குளிர்பானம் கெட்டுப்போகவில்லை என்றும், அதன் காலாவதி தேதி இன்னும் ஆறு மாதங்கள் இருப்பதாகவும், அது சமீபத்தில் வாங்கப்பட்டது என்றும் கூறினார். ஆனால், அருகில் இருந்தவர்களிடம் குடித்துப் பார்க்கச் சொன்னபோது, அதுவும் கெட்டுப்போயிருப்பதை உறுதிப்படுத்தினர். இந்த சம்பவத்தை தங்கள் செல்போனில் பதிவு செய்த தம்பதியினர், அதனை நேற்று சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ தற்போது பரவலாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி