நீலகிரி: வெடிகுண்டு கண்டுபிடிக்கும் உபகரணங்களுடன் தீவிர சோதனை
நீலகிரி மாவட்டத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருவதை யொட்டி ஹெலிகாப்டர் இறங்கும் தளத்தை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தது காவல் துறை. வெடிகுண்டு நிபுணர்கள் அதி நவீன வெடிகுண்டு கண்டுபிடிக்கும் உபகரணங்களுடன் தீவிர சோதனை நடத்தினர். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 4 நாட்கள் பயணமாக வரும் 27ம் தேதி டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை விமான தளத்திற்கு வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நீலகிரி மாவட்டம் உதகை ராஜ்பவன் வருகிறார். 28ம் தேதி கார் மூலம் குன்னூர் வெலிங்டன் பகுதியில் அமைந்துள்ள முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று உரையாற்றுகிறார். 29ம் தேதி உதகை ராஜ்பவனில் ஓய்வெடுக்கும் அவர் 30ம் தேதி காலை ஹெலிகாப்டர் மூலம் கோவை சூலூர் விமானப்படை தளத்துக்கு சென்று அங்கிருந்து விமானம் மூலம் திருச்சி சென்று அங்கிருந்து திருவாரூர் செல்கிறார்.