நீலகிரியில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி

85பார்த்தது
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சி ஆணையாளராக இருந்த ஏகராஜ் தேனிக்கும், தேனி நகராட்சி ஆணையாளராக இருந்த ஜஹாங்கீர் பாஷா உதகைக்கும் மாற்றப்பட்டனர்.

மாஸ்டர் பிளான் விதி அமலில் உள்ளதால் நீலகிரி மாவட்டத்தில் கட்டிடம் கட்டுதல் உள்பட பல்வேறு விஷயங்களுக்கும் விதிமுறைகள் அதிக அளவில் உள்ளது. இதற்கிடையே உதகை நகராட்சியில் பிரபல ஜவுளிக்கடை கட்டிடம், பார்க்கிங் டெண்டர் உட்பட விதிமுறைகளை மீறி லஞ்சமாக பணம் பெற்றுக் கொண்டு பல்வேறு செயல்பாடுகள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது.

இந்நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினம் என்பதால், நகராட்சி ஆணையாளர் ஜஹாங்கீர் பாஷா நேற்று மாலை பணியை முடித்துக்கொண்டு சொந்த ஊரான சென்னைக்கு கோத்தகிரி சாலை வழியாக வாடகை காரில் சென்றுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி