நீலகிரி மாவட்டத்தின் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா ஆகிய பகுதிகளில் இங்கிலீஷ் காய்கறிகள் அதிகளவில் பயிரிடப்படுகிறது. ஆனால் விவசாயிகள் தற்போது கொய்மலர், ஸ்ட்ராபெர்ரி மற்றும் மூலிகை தாவர வளர்ப்பு என மாற்று சாகுபடியில் தீவிரம் காட்டி வருகின்றனர். ஸ்ட்ராபெர்ரி மற்றும் கொய்மலர்களுக்கு வெளி மாநிலங்களில் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக தற்போது ஒரு கிலோ ஸ்ட்ராபெர்ரி ரூ.400 வரை விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.