நீலகிரியில் பழங்குடியினர் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு முகாம்

80பார்த்தது
நீலகிரி மாவட்டம் உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் தமிழ்நாடு அரசு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து பழங்குடியினர் ஆய்வு மையம் மூலம் நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் அழிவின் விளிம்பில் உள்ள பண்டைய பழங்குடியினர்களுக்கு வேலை வாய்ப்பு திறன் வழிகாட்டுதல் நிகழ்வு மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் அண்ணாதுரை அவர்களின் வழிகாட்டுதலில் உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் இன்று நடைபெற்றது

நீலகிரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சக்திவேல் வரை வரவேற்பு உரையாற்றினார்.
மாவட்டத்தில் வசிக்கும் 10 மற்றும் 12 டிகிரி முடித்த சுமார் 200 பழங்குடியின மாணவர்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனர் பின்பு படித்த பழங்குடியினர் இளைஞர்கள் வேலை வாய்ப்புக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியின் மூலம் முன்னணி நிறுவனங்களில் தங்கும் மற்றும் உணவு வசதியுடன் திறன் பயிற்சி அளிக்கப்பட்டு பழங்குடியினர் இளைஞர்களுக்கு இந்தியா தனியார் நிறுவனங்கள் பணி அமர்த்த உள்ளனர்கள் எனவும் இதன் மூலமாக பழங்குடியினர் இளைஞர்கள் பொருளாதார தன்னிறைவு அடைந்து மற்ற பழங்குடியின இளைஞர்களுக்கு முன்மாதிரியாக திகழ்வார்கள் என்றும் மேலும்ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் அவர்களுக்கும் மற்றும் அரசு செயலாளர் அவர்களுக்கும் பழங்குடியினர் ஆய்வு மையம் சார்பாக நன்றியினை தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி