எங்கடா இங்க இருந்த ரோடு....

51பார்த்தது
எங்கடா இங்க இருந்த ரோடு.

நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சிக்கு உட்பட்ட 27வது வார்டு தீட்டுக்கள் பகுதியை சுற்றி  சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

தீட்டுக்கள் பகுதியில் இருந்து அதனை சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களை இணைக்கும் முக்கிய வழித்தடம் என்பதால் லாரி, டிராக்டர், கார், வேன், ஆட்டோ, பள்ளி வாகனங்கள், இந்த சாலை வழியாக அதிக அளவு சென்று வருகின்றன

தற்போது இந்த சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. குறிப்பாக சாலை பெயர்ந்து பெரிய பள்ளங்களுடன் காட்சி அளிக்கிறது.

இதனால்  இருசக்கர வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன. மேலும் சாலை சேதமடைந்து உள்ளதால் பள்ளி மாணவர்கள ;மற்றும் அவசர நோயாளிகளை அழைத்து செல்லும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் பிற வாகனங்கள் மிகுந்த சிரமத்துடன் இந்த பகுதியை கடந்து செல்கின்றன.

மேலும், மழைக்காலங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறிவிடுவதால் இந்த சாலை வழியாக பயணிக்கும் மக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளார்

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி