கூடலுார்: மலையில் பூத்து குலுங்கும் காட்டு சூரியகாந்தி!

53பார்த்தது
கூடலுார்- ஊட்டி தேசிய நெடுஞ்சாலை, கோக்கால் மலைப்பகுதிகளில் பூத்து குலுங்கும் காட்டு சூரியகாந்தி பூக்கள் சுற்றுலா பயணிகளை வியப்பில் ஆழ்த்தி உள்ளது. கூடலுார், பந்தலுார், நடுவட்டம், முதுமலை வனப்பகுதிகள் ஒட்டுண்ணிகள், குறிஞ்சி உள்ளிட்ட ஏராளமான அரிய மலர் செடிகளை வாழ்விடமாக கொண்டுள்ளன. ஒவ்வொரு பூக்களின் அழகையும் ஒவ்வொரு சீசன்களில் காண முடிகிறது. அதில், தற்போது, மஞ்சள் வண்ணத்தில் காட்டு சூரியகாந்தி மலர்கள், கூடலுார் முதல் ஊசிமலை வரையிலான, ஊட்டி தேசிய நெடுஞ்சாலை ஓரங்கள், கோக்கால் மலைப்பகுதிகளில் பூத்து அழகாக காட்சியளிக்கிறது. இதனை இவ்வழியாக ஊட்டிக்கு பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள் வியர்ந்து ரசித்து செல்கின்றனர். தாவர ஆய்வாளர்கள் கூறுகையில், காட்டு சூரியகாந்தி பூக்கள் சரிவான மலைச்சாரல் பகுதிகளில் அதிக அளவில் வளர கூடியவை. தற்போது மஞ்சள் நிறத்திலான இவைகள் பல இடங்களில் பூத்துள்ளது. இவற்றில் தேனீக்களும் அதிகளவில் வந்து தேனை உறிஞ்சி செல்கின்றன. இதன் வேர் பூமிக்கு அடியில் ஆழமாக உள்ளே செல்லவதால், புல்வெளிகள் போன்று மண் சரிவை தடுக்கிறது. இந்த செடிகள் ஆங்கிலேயர் காலத்தில் தென்ஆப்பிரிக்காவில் இருந்து நீலகிரிக்கு கொண்டுவரப்பட்டவை ஆகும் என்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி