கூடலூர் - Gudalur

கோத்தகிரி: கேரட் விலை உயர்வு- விவசாயிகள் மகிழ்ச்சி

கோத்தகிரி: கேரட் விலை உயர்வு- விவசாயிகள் மகிழ்ச்சி

நீலகிரி மாவட்டத்தில் நடப்பாண்டு, கேரட் அதிக பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது. குறிப்பாக, கோத்தகிரி பகுதியில், நெடுகுளா, வ.உ.சி., நகர், ஈளாடா, கட்டபெட்டு, கூக்கல்தொறை, ஊட்டி பகுதியில், எம்.பாலாடா, நஞ்சநாடு, அணிக்கொரை, துானேரி, குனனுார் பகுதியில், பந்துமி மற்றும் கொலக்கம்பை பகுதிகளில் அதிக பரப்பளவில் கேரட் பயிரிட்டு விவசாயிகள் பராமரித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக மழை பெய்த நிலையில் கேரட் மகசூல் அதிகரித்துள்ளது. தற்போது, ஒரு கிலோ கேரட், மேட்டுப்பாளையம் மண்டிகளில், தரத்திற்கு ஏற்ப, 70 முதல், 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. உள்ளூர் கடைகளில், 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. கடந்த காலங்களை காட்டிலும், கேரட் விலை கணிசமாக உயர்ந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வீடியோஸ்


நீலகிரி