கடந்த ஜூலை 30ஆம் தேதி நள்ளிரவில் வயநாடு பகுதியில் நடந்த கோர நிலச்சரிவில் சிக்கி பலரும் உயிரிழந்த நிலையில் மத்திய அரசு வயநாடு பகுதிக்கு எந்த ஒரு உதவிகளையும் செய்யவில்லை என்று டி எஃப் எல் டி எஃப் கட்சியினர் வயநாட்டில் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த ஜூலை மாதம் 30 ஆம் தேதி இரவு 31ஆம் தேதி அதிகாலை ஒரு மணி அளவில் பெய்த கன மழையில் கோர நிலச்சரிவில் சிக்கி முண்டக்கை மற்றும் சூரர் மலை பகுதிகள் முற்றிலும் சேதமடைந்து பல உயிர்களை காவு வாங்கியது அச்சமயம் கேரளா அரசு மட்டும் அனைத்து உதவிகளையும் செய்த நிலையில் மத்திய அரசு கோர விபத்தில் சிக்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு எந்த ஒரு நிவாரணமும் உதவிகளையும் செய்யவில்லை என்று டிஎஃப் மற்றும் எல் டி எப் கட்சியினர் முழு அடைப்பு போராட்டத்தில் வயநாடு பகுதியில் ஈடுபட்டு வருகின்றனர் இதனை தொடர்ந்து மருத்துவம் மற்றும் மருந்து கடைகள் பால் வினியோகம் மட்டுமே செயல்படும் என்றும் மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்படும் என்றும் பேருந்துகள் இயக்கப்படாது என்றும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர் இதனால் வயநாடு பகுதி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.