வக்ஃபு வாரிய திருத்த மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து உதகையில் 500க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் போராட்டம்.
மத்திய அரசின் வக்ஃபு வாரிய திருத்த மசோதாவை எதிா்த்து, நீலகிரி மாவட்டம் உதகையில் தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் அமைப்பினா் உதகை ஏடிசி திடலில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
வக்ஃபு வாரிய திருத்தச் சட்டம் என்ற பெயரில் இஸ்லாமியா்களுக்கு தா்மமாக வழங்கப்பட்ட நிலங்களை அபகரிக்கும் முயற்சியில் ஒன்றிய அரசு ஈடுபட்டுள்ளது.
வக்ஃபு வாரியத்துக்குச் சொந்தமான இடங்களை, பெருநிறுவன முதலாளிகளுக்கு தாரை வாா்க்கவும், ஊழல் செய்வதற்கும் பாஜக அரசு சதி செய்கிறது என்றும் கூறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தில் 500 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட நிலையில் பங்கேற்ற குழந்தைகள் முதல் பெண்கள், பெரியவா்கள் வரை மத்திய அரசுக்கு எதிராக பதாகைகளை ஏந்தியவாறு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினா்.