உதகை நகராட்சிக்கு உட்பட்ட ஏழு அதிமுக கழக வார்டுகளில் நகராட்சி நிர்வாகம் மக்களின் அடிப்படை வசதிகள் கடந்த மூன்று வருட காலமாக புறக்கணித்து வருவதாக அஇஅதிமுக சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு.
நீலகிரி மாவட்டம் உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் உதகை நகராட்சிக்குட்பட்ட ஏழு வார்டுகளில் மக்களின் அடிப்படை வசதியான பாதாள சாக்கடை கழிவுநீர் கால்வாய் மற்றும் குடிதண்ணீர் ஆகிய முக்கிய பிரச்சினைகள் வார்டுகளில் மிகவும் பெரும் பிரச்சினையாக உள்ளதாகவும்
பழுதடைந்த கான்கிரீட் நடைபாதைகள் மற்றும் தடுப்பு சுவர்கள் தார் சாலைகள் தெருவிளக்கு மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் இவைகளை டெண்டர் விடப்பட்டு சரி செய்து தரும்படி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிமுக வார்டு உறுப்பினர்கள் சார்பில் மனு அளித்தனர்.