இது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
நீலகிரி மாவட்டம் காட்டு குப்பை பகுதியில் புதிதாக உருவாக்கப்பட்டு வரும் குந்தா நீர்மின் உற்பத்தி நிலைய பணிகளுக்காக எமரால்ட் அணையில் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீர் இன்று காலை 11 மணியளவில் வினாடிக்கு ஆயிரம் கன அடி வீதமாக 30 நாட்களுக்கு தொடர்ந்து திறக்கப்பட உள்ளது. அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் எடக்காடு கால்வாய் வழியாக குந்தா பாலம் சென்றடையும், எனவே மழைநீர் செல்லும் பாதையின் ஓரங்களில் குடியிருக்கும் பொதுமக்கள் அணையின் உள்ள நீர் திறக்கப்படும் 30 நாட்களுக்கும் பாதுகாப்பாக இருக்குமாறும், தாழ்வான பகுதியில் குடியிருந்து வரும் மக்கள் மேடான பகுதிக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அணையில் இருந்து நீர் திறக்கும் சமயத்தில் நீரோடைகளுக்கு அருகில் செல்லவோ, அருகில் நடக்கவோ கூடாது என்றும், நீரோடையில் குளிக்கவும் அல்லது வாகனங்கள் மூலம் கடக்கவோ கூடாது என்றும், குழந்தைகளை நீரோடையில் விளையாட அனுமதிக்க கூடாது,
உதவி தேவைப்பட்டால் 24 மணி நேர கட்டுப்பட்ட அறை இலவச எண்ணான 1077 மற்றும் 0423-2450034, 0423-2450035 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் ஆட்சியர் அறிக்கையில் கேட்டுக் கேட்டுக் கொண்டுள்ளார்.