கட்டிடம் தண்ணீரில் அடித்து செல்லும் காட்சி வெளியாகி பரபரப்பு

64பார்த்தது
உதகை அருகே காட்டுக்குப்பை பகுதியில் புதிய நீர் மின் நிலைய பணிகளுக்காக எமரால்டு அணையில் இருந்து நேற்று வினாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. கரையோரங்களில் சில இடங்களில் தண்ணீர் புகுந்ததால் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டது.


உதகை அருகே உள்ள எமரால்டு பகுதியில் 500 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட நீர்மின் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. காட்டுகுப்பை பகுதியில் மலைகளை குடைந்து அமைக்கபட்டு வரும் இந்த நீர் மின் நிலைய பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ள நிலையில் எமரால்டு அணையில் தண்ணீர் நிரம்பி இருப்பதால் புதிய மின் நிலைய கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து பணிகளை விரைந்து முடிப்பதற்காக எமரால்டு அணையில் இருந்து நேற்று முதல் வினாடிக்கு ஆயிரம் கன அடி   தண்ணீர் 30 நாட்களுக்கு எடக்காடு கால்வாய் வழியாக குந்தா அணைக்கு திறக்கப்பட்டது.
இதனை அடுத்து எமரால்டு கால்வாயின் கரையோரத்தில் உள்ள பொதுமக்கள் வரும் 30 நாட்களுக்கு பாதுகாப்பாக இருக்குமாறும் அறிவிக்கபட்டது.
இந்நிலையில் எமரால்டு அணை நேற்று திறக்கப்பட்டது. தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் கரையோரங்களில் இருந்த கோயில், அரசு பள்ளிக்கு செல்லும் சாலை மற்றும் சில வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. உடனடியாக ஊராட்சி மூலம் ஜேசிபி எந்திரம் வரவழைக்கப்பட்டு கரையோரம் இருந்த மண் திட்டுக்கள் தூர்வாரப்பட்டன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி