மருத்துவ சான்றிதழுக்கு பணம் கையூட்டு பெற்ற பெண் மருத்துவர்.
கையூட்டு பெற்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்.
நீலகிரி மாவட்டம் உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கண் மருத்துவராக பணியாற்றி வருபவர் தாரணி.
இவர் கடந்த சில நாட்களுக்கு முன் அரசு பேருந்து ஓட்டுனர் ஒருவரிடம் மருத்துவ சான்றிதழுக்கு 200 ரூபாய் வாங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இது சம்பந்தமாக அரசு மருத்துவக் கல்லூரி நிர்வாகம் சார்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அவரின் மேல் விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.