நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், திருச்செங்கோடு அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் நடேசன், திருச்செங்கோடு நகரச் செயலாளர் கார்த்திகேயன், நகரமன்றத் தலைவர் நளினி சுரேஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், நாமக்கல் மேற்கு மாவட்ட வழக்குரைஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு, மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் சரவணன் முருகன் உள்ளிட்ட மாவட்ட, நகர திமுக நிர்வாகிகள், மகளிர் அணி, தொண்டர் அணி, மாணவர் அணி அமைப்பாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன முழக்கமிட்டனர்.