2026 சட்டமன்றத் தேர்தல் வியூக பணிக்காக பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்துடன் அதிமுக ஒப்பந்தம் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதிமுகவை மீண்டும் லைம் லைட்டிற்கு கொண்டு வந்த யார் அந்த சார் என்ற பிரச்சாரத்திற்கு பின்னணியில் இருப்பதும் பிரஷாந்த் கிஷோர் என்று கூறப்படுகிறது. பிரஷாந்த் கிஷோர் இப்போது வெளிப்படையாக பணிகளை செய்வது இல்லையென்றாலும், அவர்தான் தேர்தல் திட்டங்களை ஐபேக் நிறுவனத்திற்காக வகுத்து வருகிறார்.