நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக காணப்பட்ட நிலையில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 1 மணி அளவில் தீடீர் மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேக்கம் ஏற்பட்டது. மேலும் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் காணப்பட்டது. இதனால் விவசாயிகள் மற்றும் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.