நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் 2025 ஆங்கில புத்தாண்டு வருட பிறப்பை முன்னிட்டு திருச்செங்கோட்டில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகபுரம் ஐயப்பன் திருக்கோயிலில் படி பூஜை மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் கலசம் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. பிறகு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.