திருச்செங்கோட்டில் தெப்பத் திருவிழா

54பார்த்தது
திருச்செங்கோடு பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், அழகு முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவில் தெப்பத் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருச்செங்கோட்டில் பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், அழகு முத்துமாரியம்மன் கோயில்களில் கடந்த ஐந்தாம் தேதி பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. இதனைத் தொடா்ந்து, கோயில்களில் கம்பம் நடப்பட்டு கம்பத்துக்கு தினமும் பக்தா்கள் நீரூற்றி வழிபட்டனா்.

பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன். அழகு முத்துமாரியம்மன் உற்சவா்கள் அலங்கரிக்கப்பட்ட பூந்தேரில் வண்ண விளக்குகள் பொருத்தி மேள தாளத்துடன் பவனி வந்து ஈரோடு சாலையில் உள்ள பெரிய தெப்பக்குளத்தில் தெப்பத்தோ் உற்சவத்தில் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தெப்பக்குளத்தை தெப்பத்தேரானது மூன்று முறை வலம் வந்தது. மூன்று அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் தீபாராதனை நடைபெற்றது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி