இந்தியா - ஆஸ்திரேலியா அணிக்களுக்கு இடையேயான 5-வது டெஸ்ட் போட்டி நடைபெறும் சிட்னி மைதான பிட்ச் குறித்து ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் காட்டமாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர், "சிட்னியில் முதல் நாள் பிட்சில் உள்ள புற்களை மாடுகள் பார்த்திருந்தால் அதை மேயத் தொடங்கிருக்கும். இன்று நடந்ததைப் போல இந்தியாவில் ஒரே நாளில் 15 விக்கெட் விழுந்திருந்தால் பிரளயமே வெடித்திருக்கும்’ என்று கூறியுள்ளார்.