திருச்செங்கோடு: அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்தில் குவிந்த பக்தர்கள்

60பார்த்தது
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் திருமலை மீது அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்தில் மார்கழி மாதத்தில் மரகத லிங்க தரிசனம் என்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும், இப்பூஜைக்கு சுற்றுவட்டார மற்றும் பல இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம்.

அந்த வகையில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு, மரகத லிங்கத்தை தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். மேலும், இன்று அதிகாலை சுவாமி தரிசனம் செய்வதற்காக, மலைப்பாதையின் முகப்பில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இந்நிலையில் வாகனங்களை ஒன்றன்பின் ஒன்றாக அனுமதிக்கப்பட்டன. இதனால் அப்பகுதியில் பெரும் சிரமம் ஏற்பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி