நாமக்கல் மாவட்டம் வையப்பமலை அடுத்த பொன்குறிச்சியில் இன்று பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கிராம நிர்வாக அலுவலகக் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் எம்பி ராஜேஷ்குமார் கலந்துகொண்டு பூமி பூஜை செய்து பணியைத் தொடங்கிவைத்தார். மேலும் உடன் ஒன்றியக்குழு தலைவர் ஜெகநாதன், ஊராட்சி மன்றத் தலைவர் சோமசுந்தரம், கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் உடனிருந்தனர்.