குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் பணியாற்றி வந்தவர் கிசன் சிங் (32). மத்திய தொழில் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எப்) வீரரான இவர் இன்று (ஜன.4) பணியில் ஈடுபட்டு இருந்தபோது மதியம் 2.10 மணியளவில் துப்பாக்கியால் திடீரென வயிற்றில் சுட்டுக் கொண்டார். இதில், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.