மயிலாடுதுறை: வடிகால் சீரமைக்கும் பணிகள் தீவிரம்
மயிலாடுதுறை நகரில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வடிகால் பகுதிகளில் மழை நீர் தேங்கி அடைப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மயிலாடுதுறை போலீஸ் ஸ்டேஷன் சாலையில் மயிலாடுதுறை நகராட்சி பணியாளர்கள் சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீர் அடைப்பை சரி செய்து தண்ணீர் செல்ல வழிவகை செய்தனர். மேலும் இந்த பணிகளை மயிலாடுதுறை நகர் மன்ற தலைவர் செல்வராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.