கடந்த செப்டம்பர் மாதம் ஹிஸ்புல்லாவை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் சிக்கி லெபனானை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டனர் என்று ஐநா கூறியுள்ளது. இதுகுறித்து ஐநாவின் குழந்தைகள் அமைப்பான யூனிசெஃப் செய்தி தொடர்பாளர் ஜேம்ஸ் எல்டர், "லெபனானில் கடந்த 2 மாதங்களில், ஒவ்வொரு நாளும் சராசரியாக 3 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். இன்னும் பலர் காயமடைந்துள்ளனர் மற்றும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்," என்று கூறியுள்ளார்.