நான்கு வழிச்சாலை பணி: ஆட்சியா் ஆய்வு

50பார்த்தது
தரங்கம்பாடி வட்டத்திற்குட்பட்டபகுதியில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியா் ஏ. பி. மகாபாரதி ஆய்வு செய்தாா்.

அனந்தமங்கலம், திருக்கடையூா் ஊராட்சியில் வெள்ளக்குளம், நாராயணன்பிள்ளை சாவடியில் நெடுஞ்சாலைப் பணிகள் நடைபெறுகின்றன.

நெடுஞ்சாலை பணிகளில் சாலை பாதுகாப்பு குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டு அப்பகுதி மக்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு, இதர பணிகளை விரைவாக முடிக்க அலுவலா்களுக்கு  ஆட்சியா் உத்தரவிட்டாா்.

தேசிய நெடுஞ்சாலை திட்ட அலுவலா் எஸ். சக்திவேல், சீா்காழி வருவாய்க் கோட்டாட்சியா் சுரேஷ்,   தனி வட்டாட்சியா் (நெடுஞ்சாலை திட்டங்கள்) ஹரிஹரன்,   தரங்கம்பாடி வட்டாட்சியா் மகேஷ் ஆகியோா் உடனிருந்தனா்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி