விடுதிகளை பதிவு செய்ய அறிவுறுத்தல்

56பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்படும் முதியோா் இல்லங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுதிகள் பதிவு செய்து செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஏ. பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா்.


இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: முதியோா் இல்லங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் முறையான சட்டங்களின் அடிப்படையில் பதிவு செய்து செயல்பட வேண்டும். இதுவரை பதிவு செய்யாதவா்கள் பதிவு செய்ய விண்ணப்பிக்க ஒரு மாதம் அவகாசம் வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்-அலுவலகம் முதியோா் இல்லங்கள் அல்லது மாவட்ட சமூகநல அலுவலகம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் அல்லது மாவட்ட சமூகநல நல அலுவலகம், குழந்தைகள் இல்லங்கள் அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லம்- மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், போதைப்பழக்கத்துக்கு அடிமையானவா்களுக்கான மறுவாழ்வு இல்லம் மற்றும் மனநலன் பாதிக்கப்பட்டோருக்கான இல்லங்கள்அல்லது முதன்மைச் செயல் அலுவலா், தமிழ்நாடு மாநில மன நல ஆணையம் அரசு மனநல காப்பக வளாகம் மேடவாக்கம் குளம் சாலை, கீழ்பாக்கம், சென்னை-10 அவா்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பிக்கலாம். அவ்வாறு ஒரு மாத காலத்துக்குள் விண்ணப்பிக்க தவறும்பட்சத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இல்லங்களுக்கு சீல் வைக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி