கன்னியாகுமரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்திற்காக வெளி மாநிலங்களில் இருந்து ரேஷன் அரிசி வருகிறது. அதன்படி, இன்று ஆந்திராவில் இருந்து 2500 டன் அரிசி சரக்கு ரயில் மூலம் நாகர்கோவில் ரயில் நிலையம் வந்தடைந்தது. நாகர்கோவிலில் இருந்து லாரிகள் மூலம் அரிசி ஏற்றப்பட்டு பள்ளி விளையில் உள்ள மத்திய உணவு பொருள் சேமிப்பு கிட்டங்கிக்கு அனுப்பப்பட்டு வருகிறது.