தஞ்சை மாவட்டம் பாபநாசம் முல்லைநகர் 108 சிவாலயம் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம் (55). இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் மகளுக்கு திருமண ஏற்பாடு செய்துள்ளார் முருகானந்தம். இதனையடுத்து திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடையோரா இருந்தது. இந்நிலையில், நிச்சயதார்த்தத்தை நடந்த பணம் இல்லாத காரணத்தால் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்துள்ளார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.