கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொது மக்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது பொதுமக்கள் சார்பில் வீட்டுமனை பட்டா, கடன் உதவி, பட்டா பெயர் மாற்றம் உள்ளிட்ட மனுக்கள் கொடுக்கப்பட்டன. மொத்தம் 575 மனுக்கள் பொதுமக்கள் சார்பில் கொடுக்கப்பட்ட நிலையில், அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.