கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாஞ்சில் கூட்ட அரங்கில் மனுநீதி நாளான இன்று நடைபெற்றது இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் அழகு மீனா அவர்கள் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டு அறிந்தார் இதில் ஏராளமான பொதுமக்கள் தங்களது குறைகளை மனுவாக தயார் செய்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கொடுப்பதற்காக வரிசையில் நின்று மனுக்களை கொடுத்து வருகின்றன அப்பொழுது அங்கு தனது வீட்டில் திருடப்பட்ட பொருட்களை காவல்துறை கண்டுபிடித்து தர வேண்டும் என கூச்சலிட்டு கையில் முறையாக மனு எதுவும் இல்லாமல் மாவட்ட ஆட்சியர் மனு பெற்று வரும் நாஞ்சில் கூட்ட அரங்கில் செல்ல முற்பட்டபோது பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர் அப்போது கோபமடைந்த அந்த நபர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளே செல்ல முற்பட்டார் போலீசார் முறையாக புகார் மனு இல்லாமல் உள்ளே செல்ல முடியாது என தடுத்து நிறுத்திய போது அந்த நபர் தரையில் அமர்ந்து கூச்சலிடத் தொடங்கியதால் சலசலப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து முறையாக புகார் மனு தயார் செய்து காவல் நிலையத்தில் கொடுத்தால் உடனடியாக நடவடிக்கை எடுத்துத் தருவதாக காவல்துறையினர் சமாதானம் செய்து அதன் அவரை அனுப்பி வைத்தனர்.