இந்திய அளவில் நம் தமிழும் ஹிட், பட்ஜெட்டும் ஹிட் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 2025-26 பட்ஜெட் குறித்து காணொளி வெளியிட்டுள்ள ஸ்டாலின், "பட்ஜெட் குறித்து இந்தியா முழுக்கவுள்ள அனைத்து நாளிதழ்களிலும் வெளியாகியுள்ளது. குறிப்பாக எதிர்க்கட்சிகளின் அரசியல் குற்றச்சாட்டுகளுக்கு செக் வைத்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படி ஏராளமான செய்திகள் வெளியாகியுள்ளது. பட்ஜெட்டில் என்ன இருக்கிறது என்று கூசாமல் கேட்பவர்கள் பத்திரிக்கைகளை படிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.