கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த பள்ளிவிளை பகுதியை சேர்ந்தவர் செல்வன். இவரது வீட்டின் முன்பு இன்று(மார்ச் 12) காலை வனப்பகுதியில் இருந்து தப்பி வந்த மிளா ஒன்று தஞ்சமடைந்தது. மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் புகுந்த மிளாவால் அப்பகுதியினர் வீட்டை விட்டு வெளியே வர அச்சமடைந்தனர். தகவல் கொடுக்கப்பட்டு, சம்பவ இடத்திற்குச் சென்ற வனத்துறையினர் நீண்ட நேரம் போராடி மிளாவை பிடித்து சென்றனர்.