குமரி கிழக்கு மாவட்ட தி. மு. க. சார்பில் தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்ற தலைப்பில் மத்திய பா. ஜனதா அரசை கண்டித்து நாகர்கோவில் செம்மாங்குடி ரோட்டில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கிழக்கு மாவட்டதி. மு. க. செயலாளர் மேயர் மகேஷ் தலைமை தாங்கி பேசினார். மாநகர தி. மு. க. செயலாளர் ஆனந்த் வரவேற்று பேசினார். மாவட்ட பொருளாளர் கேட்சன், கரோலின் ஆலிவர்தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை கழக பேச்சாளர்கள் நெல்லை ரவி, சிவ காசி ஜீவா, முன்னாள் எம். பி. ஹெலன் டேவிட்சன் ஆகியோர் பேசினார்கள். கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் தில்லை செல்வம், தாமரை பாரதி, மாநகராட்சி மண்டல தலைவர்கள் ஜவகர், அகஸ்டீனா கோகிலவாணி, குமரிமாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், தலைமைச் செயற் குழு உறுப்பினர் சதாசிவன், பகுதி செயலாளர் சேக் மீரான், ஒன்றிய செயலாளர்கள் பாபு, செல்வன், பிராங்கிளின், லிவிங்ஸ்டன், சுரேந்திர குமார், அணிகளின் அமைப்பாளர்கள் இ. என். சங்கர், அருண் காந்த், அகஸ்தீசன், பேரூர் செயலாளர் குமரி ஸ்டீபன், வக்கீல் பால ஜனாதிபதி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிழக்கு பகுதி செயலாளர் துரை நன்றி கூறினார். கூட்டத்தில் தொகுதி மறுசீரமைப்பு குறித்து முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் பேசிய உரை அகன்ற திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.